தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் வருகிற ஜுன் 19 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் காஜலின் பிறந்தநாள் CDPயை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
பிரபல தமிழ் திரைப்பட நடிகையான காஜல் அகர்வால் 2004 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்த “குயுன்! ஹோ காயா னா” என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார். பின் 2007 ஆம் ஆண்டு தெலுங்கு படமான “லட்சுமி கல்யாணம்” படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கால் பதித்தார். பின் 2008ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த “பொம்மலாட்டம் “திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார். எனினும் அவரது ஆரம்ப கால சினிமா வாழ்வின் சில போராட்டங்களுக்கு பின் 2009 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த “மகதீரா” படத்தின் மூலம் ரசிகர்களிடையே ஒரு நல்ல வரவேற்பை பெற்றார். பின் தமிழில் மாற்றான் ,துப்பாக்கி, ஜில்லா ,மாரி, பாயும் புலி, மெர்சல், விவேகம், கோமாளி என பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.
இவர் தமிழில் அஜித் ,விஜய், சூர்யா, விஷால், ஜெயம் ரவி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும்” இந்தியன் 2″ திரைப்படத்திலும், நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் “ஏய் சினாமிகா” என்ற படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.
வருகிற ஜூன் 19-ம் தேதி அவரது பிறந்த நாளாகும். அன்று இவரது ரசிகர்கள் காமென் DP யை வைத்து பிறந்தநாளை கொண்டாடுவதற்காக ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த காமன் DP ஐ ‘சைனு மாஷ்’ வடிவமைத்துள்ளதாகவும், இதை வருகிற ஜூன் 18-ம் தேதி மாலை 6 மணிக்கு நடிகை ரகுல் பிரீத் சிங் மற்றும் நடிகை ஹன்சிகா மோத்வானி ஆகியோர் வெளியிட உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. இதை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.