நடிகர், இசையமைப்பாளர், பாடகர், எடிட்டர் பாடல் எழுத்தாளர், ஆடியோ இன்ஜினியர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முக திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு என்று தனி பாணி வைத்திருக்கிறார்.
தற்போது தமிழில் சில படங்களில் ஒப்பந்தமாகியிருக்கும் விஜய் ஆண்டனியின் VAP10 என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அவரின் பிறந்த நாளன்று ஜூலை 24ஆம் தேதி வெளியிடப்படும் என்று திரைப்படக் குழு தற்போது தெரிவித்துள்ளது.
தற்போது விஜய் ஆண்டனியின் பிறந்தநாளன்று எந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இதை மையமாகக் கொண்டு விஜய் ஆண்டனி தன் சமூக வலைதளபக்கத்தில் எந்த படத்தின் சிகுவள் உருவாகிறது என்று ஊகிக்குமாறு தன் ரசிகர்களிடத்தில் கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பெரும்பாலோனோர் “பிச்சைக்காரன் 2” படம் என்று ஊகித்துள்ளார்கள்.
Hi friends, baffled about which sequel it would be!! Take a guess. Watch this space for more updates #july24
இசையமைப்பாளராக பிரபலமான பின் விஜய் ஆண்டனி நடிக்க தொடங்கிய பின்பு தயாரிப்பாளரானார். இவர் நடிப்பில் வெளியான முதல் படமான “நான்” படத்திலேயே ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்ற விஜய் ஆண்டனி, தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், சைத்தான், எமன், காளி கொலைகாரன் போன்ற படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.
தற்போது விஜய் ஆண்டனி பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் “தமிழரசன்” என்ற படத்திலும், நவீன் இயக்கத்தில் “அக்னி சிறகுகள்” என்ற படத்திலும் ஏ.செந்தில்குமார் இயக்கத்தில் “காக்கி” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இதுமட்டுமின்றி அனந்தகிருஷ்ணன், விஜய்மில்டன், பாலாஜி.கே.குமார் ஆகியோரின் இயக்கத்தில் தனித்தனி படங்களில் ஒப்பந்தமாகி இருக்கும் விஜய் ஆண்டனி தமிழ் திரையுலகில் தற்போது பிஸியான நடிகராக வலம் வருகிறார். இந்த மூன்று படங்களின் ப்ரீபுரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.