லட்சுமி ராமகிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்ட எலிசபெத் ஹெலன்!
July 23, 2020 / 07:35 PM IST
|Follow Us
சமீபத்தில் இணையதளத்தில் வைரலாகி வருவது நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பாலின் திருமணம் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த பிரச்சனை பற்றி தான்.
சமீபத்தில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணமான மறு நிமிடமே பீட்டர்பாலின் முதல் மனைவி தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து வனிதா விஜயகுமார் திருமணம் குறித்து பலரும் விமர்சிக்க தொடங்கினார்கள். அனைவருக்கும் தக்க பதிலடி கொடுத்து வந்த வனிதா விஜயகுமார், சமீபத்தில் சிலர் மீது சைபர் புள்ளியிங் புகார் அளித்தார்.
இந்த பிரச்சனையில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தன் கருத்துக்களை பதிவிட்டு ஏற்கனவே வனிதா அவரை சரமாரியாக திட்டியதால் மன்னிப்பு கேட்டு விலகியிருந்தார். பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் தன் பிரச்சனையை முறையிட்டதால், மீண்டும் இந்த பிரச்சினையில் தன் கருத்துக்களைப் பற்றி பேச லட்சுமி ராமகிருஷ்ணன் முன்வந்தார்.
இதனால் கோபமடைந்த வனிதா ஒரு நேரலையில் சரமாரியாக லக்ஷ்மி ராமகிருஷ்ணனை திட்டித்தீர்த்து, அந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
லக்ஷ்மி ராமகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் திட்டிய வனிதா, பின் தன் குடும்ப விஷயத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்று கடுமையாக கூறியிருக்கிறார்.
இதன்பின் தற்போது வனிதா சோசியல் மீடியாவிலிருந்து முழுவதுமாக விலகிவிட்டார். அதுமட்டுமின்றி இவர் சைபர் புள்ளியிங் கேஸ் கொடுத்த சூர்யா தேவியை போலீசார் தற்போது கைது செய்துள்ளார்கள்.
இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் வனிதா பேசியதற்கு பீட்டரின் முதல் மனைவி ஹெலன் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் “லட்சுமி ராமகிருஷ்ணனை இந்த பிரச்சினை பற்றி பேசுவதற்கு நாங்கள்தான் அழைத்தோம். அதனால்தான் அவரை வனிதா தகாத வார்த்தைகளால் திட்டி பேசியுள்ளார். இதை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன். அதனால் வனிதா திட்டியதற்கு அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றாலும் பரவாயில்லை அவருக்கு பதிலாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உங்களை இந்த பிரச்சனையில் பேச அழைத்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் தகுதியை விட்டு நீங்கள் இந்த பிரச்சனையில் பேசியதற்கு நாங்கள் தான் காரணம். இதனை நினைத்து எனக்கு உறக்கமே வரவில்லை. மன்னித்து விடுங்கள்” என்று கூறியிருக்கிறார்.
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) July 23, 2020
இந்த வீடியோவை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு “எந்த தவறும் செய்யாத எலிசபெத் ஹெலன் மன்னிப்பு கேட்டுள்ளார். என்னை பிரச்சனையில் தலையிட வைத்ததற்காக அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் ஒரு ஸ்டிராங் விமன். பெண்ணியம் என்பது மற்ற பெண்களை அழிப்பது அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.