உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சைக்குரிய விஷயங்களில் பின்பு சிக்கிய நடிகை மீரா மிதுன், தற்போது ஒரு சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு பெண் என்றும் தமிழ்பெண் என்று தமிழ்நாட்டு ரசிகர்களை ஏமாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். சமீபகாலமாக மீரா மிதுன் பிரபலங்களை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
இதற்கு முன்னர் நடிகை திரிஷா தனது புகைப்படத்தை மார்ப்ஃ செய்து வெளியிட்டுள்ளதாக சர்ச்சையான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதை திரிஷா ரசிகர்கள் கலாய்த்தும், கோபமாகவும் பதிவுகளை வெளியிட்டு வந்தார்கள்.
இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் மற்றும் ரஜினியை வம்பிழுத்து பதிவுகளை வெளியிட்டிருந்தார். தொடர்ந்து பிரபலங்களை வம்பிழுத்து சர்ச்சையான பதிவுகளை வெளியிட்டு வரும் மீரா மிதுன் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷை பற்றி தன் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இவர் “ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு பெண், ஆனால் தமிழ் பெண் என்று தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறார். பக்கத்து வீட்டு பெண் போல வேடங்களில் நடித்து மக்களின் சிம்பதியை பெற முயற்சிக்கிறார். தன் கடும் முயற்சியால் வந்ததுபோல வேடமிடும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நெப்போடிஷம் ப்ராடெக்ட்! மக்களை ஏமாற்றுவதற்கு இது என்ன புதிய டெக்னிக் ஐஸ்வர்யா ராஜேஷ்” என்று சர்ச்சையாக பதிவிட்டுள்ளார்.
இதற்கு பலரும் அவரை கிண்டல் செய்து கமெண்ட் செய்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி ஐஸ்வர்யா ராஜேஷ் தன் கடும் முயற்சியால் உயர்ந்துள்ளதாகவும் இதைப்பற்றி உனக்கு புரிய வாய்ப்பில்லை என்று கோபமாக ஐஸ்வர்யா ராஜேஷ் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராஜேஷ் டெட் டாக் எனும் நிகழ்ச்சியில் பேசிய பொழுது, தான் கடந்து வந்த பாதை பற்றியும் சந்தித்த இன்னல்கள் பற்றியும் தன் விடாமுயற்சி பற்றியும் பேசியிருந்தார். அப்போது அவர் தான் தெலுங்கு பெண் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.