சமீபத்தில் இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம், அதன் தொடர்பான பிரச்சனைகளும் ஆகும்.
பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன் தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்ற செய்தியை வெளியிட்டது முதலே, இவர்கள் திருமணம் குறித்து பலரும் விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வந்தார்கள். இதற்கு தக்க பதிலடி கொடுத்து வந்த வனிதா, சமீபத்தில் சூர்யா தேவி என்பவர் மீது சைபர் புல்லியிங் கேஸ் ஒன்றையும் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து வனிதாவை மீண்டும் லட்சுமிராமகிருஷ்ணன், கஸ்தூரி தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோர் விமர்சனம் செய்து வந்தார்கள். இதனால் வனிதா விஜயகுமார் சோஷியல் மீடியாவில் இருந்து விலகியிருக்க முடிவு செய்து, ட்விட்டரிலிருந்து விலகிவிட்டார்.
இவர் ட்விட்டரில் இருந்து விலகிய மறுநாளே மீண்டும் ட்விட்டர் பக்கம் வந்து தான் ஏன் ட்விட்டரிலிருந்து விலகினார் என்றும், யாருக்கும் தான் பயப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து மீண்டும் அவர் தனக்கு வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வந்தார். இதற்கிடையில் வனிதா மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஒரு வீடியோ கால் பதிவு நடந்தது. இதில் லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா தகாத வார்த்தைகளால் திட்டி பேசியிருந்தார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது.
பலரும் வனிதா லட்சுமி ராமகிருஷ்ணனை திட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்தார்கள். இதைத்தொடர்ந்து தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவின் இந்த செயலை கண்டித்து போலீசில் புகார் அளித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
வடபழனி போலீசில் கொடுத்த புகாரின் நோட்டீசை லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
இதற்கு முன்னரே வனிதா கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்தர், சூர்யா தேவி ஆகியோர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.