காயத்ரி ரகுராம் மீது நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டு!
July 28, 2020 / 07:50 PM IST
|Follow Us
தமிழ்சினிமாவில் ஆர்யா நடிப்பில் வெளியான “பாஸ் என்கிற பாஸ்கரன்” படத்தில் அவரது அண்ணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை விஜயலட்சுமி. இதற்கு முன்னர் அவர் விஜய், சூர்யா நடிப்பில் வெளியான “ஃபிரண்ட்ஸ்” படத்தில் நடித்திருந்தார்.
இதில் மட்டுமல்லாது சில தமிழ் படங்களிலும், கன்னட படங்களிலும் நடித்து வந்தார் விஜயலட்சுமி. இவர் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில் அவர் தான் தற்கொலை செய்வதற்கு இவர்கள் தான் காரணம் என்றும், அவர்கள் பெயரையும் குறிப்பிட்டு பின் தான் அதிக பீபி மாத்திரைகளை எடுத்து விட்டதாகவும் இந்த வீடியோவில் பேசிக்கொண்டிருக்கும்போதே தான் இறந்து வருவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகை விஜயலட்சுமி அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்தி வெளியானது. அதையடுத்து நடிகை விஜயலட்சுமி மருத்துவமனையிலிருந்து தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு, தன்னை காப்பாற்றி விட்டார்கள் என்றும், தான் குணமாகி வருவதாகவும் இப்படி ஒரு நிலைமையில் தான் இருக்கும்பொழுது யாரும் தன்னை பற்றி தவறாக பேசாதீர்கள் என்றும் அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் தான் குணமாவதற்கு பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகை விஜயலட்சுமி தன்னை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றி விட்டதாகவும் அதற்கு காரணம் காயத்ரி ரகுராம் தான் என்றும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தனக்கு மூச்சு விடுவதற்கே சிரமமாக இருக்கும் நிலையில் தன்னை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றி விட்டார்கள் என்று கதறி அழுதுள்ளார்.
“எனக்கு பின்னால் எந்த அரசியல் கட்சியும் இல்லை நான் நாடகம் போடவில்லை” என்று கூறிய விஜயலட்சுமி எனக்கு ஆதரவாக இருந்த காயத்ரி ரகுராம் இப்போது என் அனுமதி இல்லாமல் என்னை டிஸ்சார்ஜ் செய்து விட்டார். அதற்கான காரணம் புரியவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தற்போது இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.