ரஜினி படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம்… வெளியானது சூப்பரான தகவல்!
August 4, 2020 / 06:34 PM IST
|Follow Us
2016-ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஆந்தாலஜி படம் ‘அவியல்’. இதில் ‘களம்’ என்ற கதையை மட்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அதன் பிறகு லோகேஷ் இயக்கிய படம் ‘மாநகரம்’. ஹைப்பர் லிங்க் படமான இதில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா கசாண்ட்ரா, சார்லி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் சூப்பர் ஹிட்டானதும், லோகேஷுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததாக கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற படத்தினை இயக்கினார்.
ஆக்ஷன் த்ரில்லர் படமான இது கடந்த 2019-யில் தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. இப்படம் ரிலீஸாவதற்கு முன்பே, விஜய்க்கு கதை சொல்லி ‘மாஸ்டர்’ படத்துக்கான வேலைகளை துவங்கி விட்டார். இப்போது ‘மாஸ்டர்’ ரெடியாக உள்ளது. ‘கொரோனா’ பிரச்சனை முடிந்தவுடன் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என காத்துக்கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ‘மாஸ்டர்’-க்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை வைத்து இயக்க, அவரிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறாராம் லோகேஷ்.
இதனை ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தயாரிக்கப்போகிறாராம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. தற்போது, டோலிவுட் வட்டாரத்தில் இருந்து ஒரு சூப்பரான செய்தி கிடைத்துள்ளது. லோகேஷ் கனகராஜுக்கு டோலிவுட்டில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’, அட்வான்ஸ் கொடுத்து ஒரு படத்தை இயக்க கமிட் செய்துள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் உருவாகப்போகிறது என்று சொல்லப்படுகிறது.