இந்தியன் 2வில் பலியான தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி நிதி உதவி !
August 6, 2020 / 09:25 PM IST
|Follow Us
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “இந்தியன் 2”. பல வருடங்களாக இந்த படத்தைப் பற்றிய பேச்சு வார்த்தை நடந்து, பின்பு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த தளத்தில் கிரேன் ஒன்று விபத்துக்குள்ளாகி இந்த படத்தின் துணை இயக்குனர்கள் இருவர் உட்பட மூன்று பேர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்கள். அதுமட்டுமின்றி 9 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நசாரத்பெட்டில் உள்ள ஒரு பிரைவேட் ஸ்டூடியோவில் நடந்து கொண்டிருந்த இந்த படப்பிடிப்பின்போது அனைவரும் ஒரு சீனுக்கு செட் அமைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் ஒன்று பழுதுக்குள்ளாகி விழுந்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இது குறித்து பெப்ஸி பொதுச்செயலாளர் இன்று மாலை கமல் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனம் உரிமையாளர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளார்கள் என்று ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தார்.
இதைதொடர்ந்து தற்போது நடந்து முடிந்த ஆலோசனைக்குப் பிறகு இந்தியன்-2 படப்பிடிப்பின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளார்கள். அதுமட்டுமின்றி காயமடைந்த தொழிலாளர்களுக்கும் நிதி உதவி வழங்கப்படும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஷங்கரின் துணை இயக்குனர்கள் கிருஷ்ணா மற்றும் மது, மேலும் சமையல் வேலையில் இருந்த சந்திரன் என்பவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நடந்தபோது கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் விபத்து நடந்த இடத்திற்கு மிக அருகில் இருந்தார்களாம்.