படப்பிடிப்பு குறித்து விஜய் ஆண்டனியின் புதிய அறிக்கை!
September 4, 2020 / 06:00 PM IST
|Follow Us
நடிகர், இசையமைப்பாளர், பாடகர், எடிட்டர், பாடல் எழுத்தாளர், ஆடியோ இன்ஜினியர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முக திறமைகளை கொண்டவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கென்று தனி பாணி வைத்திருக்கிறார்.
சமீபத்தில் ஏற்கனவே கூறியிருந்தவாறு தனது புகழ்பெற்ற படமான பிச்சைக்காரன் படத்தின் சிக்குவலான “பிச்சைக்காரன் 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தார்.
2012ஆம் ஆண்டு ஜீவா சங்கர் இயக்கத்தில் வெளியான “நான்” படத்தின் மூலம் நடிகராக உருவெடுத்த விஜய் ஆண்டனி, 2005 ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான “சுக்கிரன்” படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்.
இசையமைப்பாளராக பிரபலமான பின் விஜய் ஆண்டனி நடிக்க தொடங்கி, பின்பு தயாரிப்பாளரானார். இவர் நடிப்பில் வெளியான முதல் படமான “நான்” படத்திலேயே ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்ற விஜய் ஆண்டனி, தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், சைத்தான், எமன், காளி, கொலைகாரன் போன்ற படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.
தற்போது விஜய் ஆண்டனி பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் “தமிழரசன்” என்ற படத்திலும், நவீன் இயக்கத்தில் “அக்னி சிறகுகள்” என்ற படத்திலும் ஏ.செந்தில்குமார் இயக்கத்தில் “காக்கி” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இதுமட்டுமின்றி நடிகை ஆத்மிகாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இவ்வளவு நாள் லாக்டோன் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவரது படப்பிடிப்புகள் இனிமேல் தொடங்கும் என்று ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது.
இது தொடர்பாக தற்போது செய்தி வெளியிட்டுள்ள விஜய் ஆண்டனி ” என்னை நம்பி என்னை வைத்து படம் தயாரித்துக் கொண்டிருக்கும் என் தயாரிப்பாளர்களுக்கும் என் இயக்குனர்களுக்காகவும் பெப்சி தொழிலாளர்களுக்காகவும் நாளை முதல் சரியான பாதுகாப்புடன் நான் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன். நம்பிக்கையுடன் நான்” என்று அறிக்கை விடுத்துள்ளார்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.