சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிப்பார்களா என்று இருவரது ரசிகர்களும் பலவருடங்களாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவாகவுள்ள “தலைவர் 169” திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது.
தற்போது புதிய தகவல் என்னவென்றால் இந்தப் படத்தில் ரஜினி நடிக்கப்போவதில்லை என்றும் அதனால் தற்போதைக்கு ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் படம் வெளியாக வாய்ப்பில்லை என்றும் அதற்கு பதிலாக கமல் “எவன் என்று நினைத்தாய்” என்ற இந்த படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இதை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும் தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இன்று மாலை வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து கமல் நடிக்கப் போகிறாரா இல்லை ரஜினி நடிக்கப் போகிறாரா என்பது இன்று மாலை வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.