பிரபுதேவாவிற்கு கல்யாணம் ஆகிவிட்டதா?- பரவும் செய்தி!
November 23, 2020 / 09:55 AM IST
|Follow Us
தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர் பிரபுதேவா. இவர் தற்போது ரகசியமாக 2 ஆவது திருமணம் செய்து கொண்டுள்ளதாக செய்தி பரவி வருகிறது.
சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி பின்பு நடிகர் மற்றும் இயக்குனராக உயர்ந்த பிரபு தேவா பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு நடன இயக்குனராகவும் இருந்திருக்கிறார். விஜய், ஜெயம் ரவி, விஷால், ஹிந்தியில் சல்மான்கான் அக்ஷய்குமார் அஜய் தேவ்கான் என பல முன்னணி நடிகர்களை இயக்கியுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகை நயன்தாராவுடன் காதல் வயப்பட்டு இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவு ஏற்பட்டது.
பின்பு அதிகமாக எந்த செய்தியிலும் வராத இவர், தற்போது ரகசியமாக பீகாரைச் சேர்ந்த ஒரு மருத்துவரை திருமணம் செய்துகொண்டுள்ளதாக செய்தி பரவி வருகிறது. குடும்பத்தினர் கூறியதால் இந்த திருமணத்திற்கு அவர் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தகவல் வருகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளிவரவில்லை.