தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு சமீபத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் “ஈஸ்வரன்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “மாநாடு” திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு தற்போது நடித்து வருகிறார்.
லாக்டவுனில் கடுமையாக உடற்பயிற்சி செய்து தன் வடிவத்தை முழுமையாக மாற்றிக் கொண்ட சிம்பு, தற்போது அதிகமாக தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறாராம்.
இவர் தனது தங்கை குழந்தையுடன் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது ஆளே மாறிவிட்டார் சிம்பு என்று பலர் ஆச்சரியப்படும் விதமாக தன் உடல் எடை மற்றும் வாழ்க்கை முறையை மாற்றி உள்ளார் சிம்பு.