கமலுக்கு குழந்தையாக நடித்த நடிகை எப்படி இருக்கிறார் தெரியுமா!.
December 3, 2020 / 12:05 AM IST
|Follow Us
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “விக்ரம்” படத்தில் நடிக்கவிருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது.
இவை மட்டுமின்றி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வரும் கமல் மிகவும் பிசியாக இருக்கிறார்.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1996-ஆம் வருடம் வெளியான திரைப்படம் தான் “அவ்வை சண்முகி”. இந்த திரைப்படத்தில் நடிகர் கமல் உடன் மீனா நடித்திருந்தார்.
இவர்களுக்கு திருமணமாகி இந்த படத்தில் ஒரு குழந்தை இருப்பது போன்ற காட்சி இருக்கும். இவருக்கு இந்த படத்தில் மகளாய் நடித்த பேபி அண்ரா தற்போது எப்படி இருக்கிறார் என்ற புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.