மலையாள சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே விஷாலுடன் தான். அது தான் ‘ஆக்ஷன்’. ‘ஆக்ஷன்’ படத்துக்கு பிறகு நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் நடிகர் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’, இயக்குநர் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’ என இரண்டு தமிழ் படங்கள் இணைந்தது.
இதில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. ‘ஜகமே தந்திரம்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தை வருகிற ஜூன் மாதம் 18-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’யில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

சமீபத்தில் வெளியான இதன் டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இது தவிர ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் மலையாளத்தில் நான்கு படங்களும், தெலுங்கில் ஒரு படமும் லைன் அப்பில் இருக்கிறது. தற்போது, இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இப்புது போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.
1

2

3

