‘வெயில்’ பட இயக்குநர் வசந்த பாலனுக்கு ‘கொரோனா’ பாதிப்பு!
May 5, 2021 / 06:25 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் வசந்த பாலன். ‘வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன்’ ஆகிய படங்களை இயக்கிய வசந்த பாலனின் புதிய படமான ‘ஜெயில்’ ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதில் ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ‘கைதி’ படம் மூலம் ஃபேமஸான அர்ஜுன் தாஸை வைத்து ஒரு புதிய படம் இயக்கி வந்தார் வசந்த பாலன். இதில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும், சுரேஷ் சக்கரவர்த்தி, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளார்கள். சமீபத்தில், இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது.
இந்நிலையில், இயக்குநர் வசந்த பாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “அன்புள்ள நண்பர்களுக்கு! நான் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். ஆதலால் பலருடைய தொலைபேசி அழைப்பை எடுக்க இயலமுடியவில்லை. என் மீது பேரன்பு கொண்ட நண்பர்கள், மருத்துவர்கள், உறவினர்கள் சூழ இருக்கிறேன் என்பதே மனதிற்குள் ஆயிரம் யானை பலம் கூடி வருகிறது. ஈராறு கால்கொண்டெழும் புரவியாய் மீண்டும் எழுந்து வருவேன்” என்று கூறியுள்ளார்.