‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், சில நிபந்தனைகளுடன் திரையரங்குகளை திறக்கவும், ஷூட்டிங் எடுக்கவும் அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சில படங்களின் ஷூட்டிங் துவங்கியுள்ளது.
கடந்த நவம்பர் 25-ஆம் தேதி ‘கிளாப்’ என்ற படத்தின் ஃபைனல் ஷெடியூல் ஷூட்டிங்கும் ஆரம்பிக்கப்பட்டு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. தற்போது, ஷூட்டிங் முடிவடைந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை படத்தின் ஹீரோ ஆதியே ட்விட்டரில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதுடன், படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ஆதியின் அப்பாவாக வலம் வருவாராம். இப்படத்தில் ஹீரோ ஆதி ஒரு தடகள வீரனாக நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் ப்ரித்வி இயக்க, ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்து கொண்டிருக்கிறார். ‘பிக் பிரிண்ட் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோயின்களாக கிருஷா குருப் மற்றும் அகன்ஷா சிங் நடித்துள்ளார்கள்.
It’s a wrap for #CLAP! This journey is close to my heart…. Now bringing it close to your
pic.twitter.com/RFSdk4SD9M
— Aadhi’s (@AadhiOfficial) December 16, 2020