தமிழில் ஷங்கர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான “பாய்ஸ்” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் நகுல்.
பிறகு காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தக்கோட்டை, வல்லினம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், நாரதன், பிரம்மா, செய் போன்ற படங்களில் நடித்து தமிழ் திரைப்படவுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமல்லாது பின்னணி பாடகராகவும் இருந்துள்ளார்.
இவர் கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ருதி பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மகிழ்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு கொண்டாடினார் நகுல். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது.
தற்போது தந்தையான உற்சாகத்தில் இருக்கிறார் நகுல். இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது நகுல் சச்சின் தேவ் இயக்கத்தில் “எரியும் கண்ணாடி” என்ற படத்தில் நடித்து வருகிறார். “மாசிலாமணி” படத்தை தொடர்ந்து இந்த படத்தில் மீண்டும் நகுல் மற்றும் சுனைனா ஜோடி சேர்கிறார்கள். நிரவ் ஷா ஒளிப்பதிவில் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது நகுல் தந்தையான மகிழ்ச்சியில் இருக்கிறார் என்று செய்தி வந்துள்ளது.