தமிழ் திரையுலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தவர் ராமராஜன். ‘வசூல் சக்கரவர்த்தி’ என்று அழைக்கப்பட்ட ராமராஜன் ஆரம்ப காலத்தில் சில படங்களில் சிறிய ரோலில் நடித்து வந்தார். பின், ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ என்ற படத்தை இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்தார்.
அதன் பிறகு சில படங்களை இயக்கிய ராமராஜனை ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ என்ற படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது தமிழ் சினிமா. இந்த படம் ஹிட்டானதும் நடிகர் ராமராஜனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, ராசாவே உன்னை நம்பி, எங்க ஊரு காவக்காரன், நம்ம ஊரு நாயகன், பொங்கி வரும் காவேரி, கரகாட்டக்காரன், தங்கமான ராசா’ என படங்கள் குவிந்தது.
கடைசியாக இவர் நடித்த ‘மேதை’ 2012-ஆம் ஆண்டு ரிலீஸானது. தற்போது, நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.