மனித நேயத்திற்கான ஐநா விருதைப் பெற்றுள்ள நடிகர் சோனு சூட்!
October 1, 2020 / 01:00 PM IST
|Follow Us
நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அடித்தட்டு மக்களின் நிலை அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் ஆரோக்கியம் மிகவும் கவலைக்கிடமானது. இவர்களுக்கு உதவி செய்ய பலர் முன் வரும் நிலையில் அதில் திரைப்பட பிரபலங்களும் உள்ளடங்கும்.
பிரபல குணச்சித்திர நடிகரான சோனு சூட் “அருந்ததி” படத்தில் கொடூர வில்லனாக நடித்தவர் .இவர் கொரோனா காலத்தில் சமீபத்தில்”கர்பேஜோ” என்ற திட்டத்தின் கீழ் பிற மாநிலங்களிலிருந்து சொந்த ஊருக்கு போக முடியாமல் தவித்த மக்களுக்கு உதவி வந்தார். இதைப் பற்றி அவர் கூறியதாவது”வேற்று ஊர்களிலிருந்து சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் குழந்தைகளையும் பெரியவர்களையும் காணும்போது என் மனம் பதைபதைத்தது. இதைப்பற்றி ஏதாவது செய்ய வேண்டும் என்று அப்போது முடிவு செய்தேன்”என்று கூறினார்.
இது மட்டுமின்றி கொரோனா சமயத்தில் பாதிக்கப்பட்ட பல மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்த இவரை பலரும் பாராட்டி தங்கள் நன்றியை தெரிவித்து வந்தார்கள்.
இந்நிலையில் இவரை கௌரவிக்கும் விதமாக தற்போது மனிதநேயத்திற்கான ஐநா விருது வழங்கி யுனைடெட் நேஷன்ஸ் டெவலப்மென்ட் புரோகிரம் இவரை கௌரவித்துள்ளது. இதற்கு பல பாலிவுட் பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். நிழல் படத்தில் வில்லனாக நடித்திருந்த இந்த நல்ல மனிதருக்கு தற்போது ஐநா கௌரவத்தை வழங்கி உள்ளது.