அப்செட்டில் இளம் ஹீரோயின்… மனைவிக்காக அந்த ரிஸ்க்கை எடுக்கப்போகும் ஹீரோ!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் அந்த கடவுள் நடிகர். இப்போது, இவர் நடிப்பில் நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ஒரு படம் இந்த வாரம் OTT-யில் ரிலீஸாக உள்ளது. ஸோம்பி பட இயக்குநர் இயக்கியியுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக கடவுள் நடிகரின் மனைவியே நடித்திருக்கிறார்.

ஏற்கனவே, இவர்கள் இருவரும் இணைந்து இரண்டு படங்களில் நடித்திருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே இருந்த நட்பு, பின் காதலாக மாறி திருமணம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது. கடவுள் நடிகருக்கு திருமணத்திற்கு பிறகு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. ஆனால், மனைவிக்கோ சொல்லும் அளவிற்கு வாய்ப்புகள் குவியவில்லை. ஆகையால், மனைவிக்காக கடவுள் நடிகர் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளாராம். இனிமே மனைவி நடிக்கும் புதிய படங்களை அவரே தயாரிக்கப்போகிறாராம். அதற்காக இருவரும் பல இயக்குநர்களிடம் கதை கேட்ட வண்ணமுள்ளனர். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதை வைத்திருக்கும் இளம் இயக்குநர்களே நோட் பண்ணிக்கோங்கப்பா.

Share.