இதுவரை யாரும் பார்த்திராத சார்மி கவுரின் அரிய புகைப்பட தொகுப்பு!
May 17, 2021 / 09:54 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சார்மி கவுர். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே சிலம்பரசனுடன் தான். அது தான் ‘காதல் அழிவதில்லை’. சிலம்பரசனின் அப்பாவும், பாப்புலர் இயக்குநருமான டி.ராஜேந்தர் இந்த படத்தை இயக்கியிருந்தார். இதில் நடிகை சார்மியின் நடிப்பு அதிக லைக்ஸ் போட வைத்தது. ‘காதல் அழிவதில்லை’ படத்துக்கு பிறகு நடிகை சார்மிக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘காதல் கிசு கிசு, ஆஹா எத்தனை அழகு, லாடம்’ என தமிழ் படங்கள் குவிந்தது. சார்மி தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். கடைசியாக சார்மி நடித்த தமிழ் படம் ’10 எண்றதுக்குள்ள’. விக்ரம் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் சார்மி ‘கானா கானா’ என்ற பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார்.
இப்போது நடிகை சார்மி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘லைகர்’. இதில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே ஜோடியாக நடிக்க, இயக்குநர் பூரி ஜெகன்நாத் இதனை இயக்குகிறார். மிக விரைவில் இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸாக உள்ளதாம். இந்நிலையில், இன்று (மே 17-ஆம் தேதி) நடிகை சார்மி கவுரின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை சார்மி கவுரின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…