நடிகைகள் குஷ்பூ மற்றும் ஷோபனாவுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

சினிமாவில் பாப்புலர் நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. 1986-ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு படம் ‘கலியுக பாண்டவுலு’. வெங்கடேஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை கே.ராகவேந்திரா ராவ் இயக்கியிருந்தார். இதில் வெங்கடேஷிற்கு ஜோடியாக குஷ்பூ நடித்திருந்தார். இது தான் குஷ்பூ ஹீரோயினாக என்ட்ரியான முதல் படமாம்.

இதன் பிறகு 1988-ஆம் ஆண்டு வெளியான ‘தர்மத்தின் தலைவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரியானார். ‘தர்மத்தின் தலைவன்’ படத்திற்கு பிறகு நடிகை குஷ்பூவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்து 100 தமிழ் படங்களுக்கு மேல் நடித்து விட்டார். தற்போது, நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா டெஸ்ட் எடுத்தபோது எனக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

இதேப்போல் பிரபல நடிகை ஷோபனாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “எனக்கு ‘ஒமைக்ரான்’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். பல மலையாள படங்களில் நடித்த ஷோபனா தமிழில் ‘எனக்குள் ஒருவன், இது நம்ம ஆளு, சட்டத்தின் திறப்பு விழா, சிவா, பொன்மனச் செல்வன், வாத்தியார் வீட்டு பிள்ளை, எங்கிட்ட மோதாதே, மல்லுவேட்டி மைனர், தளபதி, போடா போடி’ போன்ற படங்களில் நடித்தார். ஷோபனா மலையாளம், தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

 

 

Share.