நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!
January 13, 2023 / 11:02 AM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். திரையுலகில் என்ட்ரியான புதிதில் சில படங்களில் நடித்திருந்தாலும், ‘அட்டகத்தி’ என்ற படத்தில் தான் ஆடியன்ஸ் மனதில் ரெஜிஸ்டர் ஆனார்.
அதன் பிறகு நடித்து 2015-ஆம் ஆண்டு ரிலீஸான ‘காக்கா முட்டை’ என்ற திரைப்படம் தான் ஐஸ்வர்யாராஜேஷின் நடிப்புக்கு லைக்ஸ் போட வைத்தது. இந்த படம் சூப்பர் ஹிட்டானதும் இவருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ் படங்கள் குவிந்தது.
ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, இவர் நடிப்பில் தமிழில் ‘மோகன் தாஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன், துருவ நட்சத்திரம், தீயவர் குலைகள் நடுங்க, ரன் பேபி ரன், இடம் பொருள் ஏவல், சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா’ என 8 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில், நேற்று (ஜனவரி 10-ஆம் தேதி) நடிகைஐஸ்வர்யாராஜேஷின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த வீடியோவை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.