ஆட்டோ டிரைவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ் !
December 31, 2022 / 12:47 PM IST
|Follow Us
தனது தனித்துவமான நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்து இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள டிரைவர் ஜமுனா படம் இன்று (30.12.2022 ) வெளியாகி உள்ளது. இதில் அவர் கால் டாக்சி டிரைவராக நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோசனுக்காக தனியார் சேனல் ஒன்றில் ஆட்டோ மற்றும் கால் டாக்சி பெண் டிரைவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துரையாடினார்.
கலந்து கொண்டவர்களில் ஒரு பெண்மணியை தேர்வு செய்து, அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் புதிய ஆட்டோ ஒன்றினை ‘டிரைவர் ஜமுனா’ படக்குழு சார்பில் ஐஸ்வர்யா பரிசாக வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நாற்பதிற்கு மேற்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் கலந்துரையாடல் நடத்தி, ஓட்டுனராக பணியாற்றிய போது நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு புதுமையாக அமைந்து இருந்தது .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.