தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான “நீ தானா அவன்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
தனது ஆரம்ப கட்டங்களில் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது முன்னணியில் இருக்கும் நடிகையாக இருப்பவர் இவர். 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி திரைப்படத்தில் கவனிக்கப்படும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியுடன் ரம்மி என்ற படத்தில் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் திரையுலகில் தக்க வைத்துக் கொண்டார்.
பின்பு காக்காமுட்டை, தர்மதுரை, செக்கச்சிவந்த வானம், வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, வானம் கொட்டட்டும் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது கா.பே.ரனசிங்கம், பூமிகா, திட்டம் 2, முந்தானை முடிச்சு ரீமேக், துருவ நட்சத்திரம், இது வேதாளம் சொல்லும் கதை, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது மற்ற ஹீரோயின்களை போல இவரும் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CFrl1Q9JKws/?igshid=1fwtwugoi7d9p
https://www.instagram.com/p/CFrl1Q9JKws/?igshid=1nip1d0znzigk
https://www.instagram.com/p/CDxyWWnpSnC/?igshid=l4104cdu78vw