திட்டம் இரண்டு’ ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் போஸ்டர் வெளியீடு..!
May 8, 2020 / 11:14 AM IST
|Follow Us
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவருடைய நடிப்பில் தமிழில் ‘க/பெ ரணசிங்கம்’, ‘துருவ நட்சத்திரம்’, ‘இது வேதாளம் சொல்லும் கதை’, ‘இடம் பொருள் ஏவல்’ மற்றும் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து வரும் படம் ஆகியவை வெளியாக உள்ளன.
“ஒரு படைப்பின் வடிவத்தை அது தரும் பெரியது” என்று கூறுவார்கள். அந்த வகையில் “Yours Shamefully” மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். அவர் இயக்கவுள்ள திட்டம் இரண்டு ஒரு மிஸ்ட்ரி திரில்லர் ஜானரை சேர்ந்த படமாக உருவாக உள்ளது என்று தெரியவந்துள்ளது. தனக்கு எந்த கதாபாத்திரம் குடுத்தாலும் அதை கச்சிதமாக செய்வதில் வல்லவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
தெலுங்கில் நானி நடிக்கவுள்ள ‘டக் ஜெகதீஷ்’ படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவை தவிர்த்து பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதில் விக்னேஷ் கார்த்திக் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே உடனே ஒப்புக்கொண்டார்.
இந்த திரைப்படத்திற்கான போஸ்டரை விஜய் சேதுபதி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘திட்டம் இரண்டு – பிளான் B’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை மினி ஸ்டுடியோ மற்றும் சிக்சர் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.