ஐஸ்வர்யா ராஜேஷின் ஹாரர் – த்ரில்லர் படமான ‘பூமிகா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தமிழில் ‘பூமிகா, மோகன் தாஸ், டிரைவர் ஜமுனா, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரீமேக், துருவ நட்சத்திரம்’, தெலுங்கில் ‘டக் ஜெகதீஷ், ரிபப்ளிக், பீம்லா நாயக்’ என எட்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘பூமிகா’ என்ற ஹாரர் த்ரில்லர் ஜானர் படத்தை இயக்குநர் ரதீந்திரன்.ஆர்.பிரசாத் இயக்கியுள்ளார்.

இப்படம் நேரடியாக விஜய் டிவியில் நேற்று (ஆகஸ்ட் 22-ஆம் தேதி) மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பானது. இதனைத் தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 23-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’-யிலும் இந்த படம் ரிலீஸாகியுள்ளது. இப்போது, இந்த படத்தை விஜய் டிவியிலும், ‘நெட்ஃப்ளிக்ஸ்’-யிலும் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Share.