ஐஸ்வர்யா ராஜேஷ் போலீஸாக நடித்துள்ள ‘திட்டம் இரண்டு’… ரிலீஸானது மியூசிக்கல் ட்ரெய்லர்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தமிழில் ‘பூமிகா, திட்டம் இரண்டு, மோகன் தாஸ், டிரைவர் ஜமுனா, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரீமேக், தருவ நட்சத்திரம்’, தெலுங்கில் ‘டக் ஜெகதீஷ், ரிபப்ளிக், ‘அய்யப்பனும் கோஷியும்’ ரீமேக் என ஒன்பது படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘திட்டம் இரண்டு’ என்ற த்ரில்லர் ஜானர் படத்தை இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் போலீஸாக வலம் வரவுள்ளார். தற்போது, இப்படத்தின் மியூசிக்கல் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. படத்தை நாளை (ஜூலை 30-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘சோனி லைவ்’வில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Share.