நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துணிவு . நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்து உள்ளது . போனி கபூர் இந்த படத்தை தயாரித்து உள்ளார் . இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் . நடிகர் சமுத்திரக்கனி , நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து உள்ளனர் .
இந்நிலையில் துணிவு படம் நள்ளிரவு 1 மணிக்கு வெளியானது . சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது அந்த திரையரங்கு வழியாக வந்த லாரியின் மீது சில ரசிகர் ஏறி நடனமாடி உள்ளனர் . அப்போது பரத்குமார் என்கிற ரசிகர் தவறி லாரியில் இருந்து கீழே விழுந்துள்ளார் இதனால் அவருக்கு முதுகு தண்டில் காயம் ஏற்பட்டு உள்ளது பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ரசிகர் பரத் உயிர் இழந்துள்ளார் . 19- வயதான பரத்குமார் சிந்தாதரி பேட்டையை சேர்ந்தவர் ஆவார் .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.