ராம் சரணின் ‘RC15’-க்காக அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தின் டைட்டிலை கைப்பற்றிய இயக்குநர் ஷங்கர்!

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கும் புதிய படத்தில் டோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் நடித்து வருகிறார். இப்படம் நடிகர் ராம் சரணின் கேரியரில் 15-வது படமாம்.

இதனை டோலிவுட்டில் பாப்புலர் தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு தனது ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரிக்கிறாராம். இது தயாரிப்பு நிறுவனம் ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’-யின் 50-வது படைப்பாம். இப்படம் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இதில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அஞ்சலி, ஜெயராம், சுனில், நவீன் சந்திரா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்கின்றனர். தமன் இசையமைத்து வரும் இதற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்துக்கு ‘சிட்டிசன்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே, அஜித் நடிப்பில் ‘சிட்டிசன்’ என்ற படம் 2001-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

Share.