‘தி லிஃப்ட் பாய்’ ரீமேக்கில் ‘கைதி’ அர்ஜுன் தாஸ்… இயக்குநர் யார் தெரியுமா?

ஒரு வில்லன் நடிகருக்கு இவ்ளோ ஃபேன்ஸா என்று ஆச்சர்யப்பட வைத்தவர் அர்ஜுன் தாஸ். இவர் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் மிரட்டிய படம் ‘கைதி’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோவாக கார்த்தி நடித்திருந்தார். இப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் ‘மாஸ்டர், அந்தகாரம்’ மற்றும் இயக்குநர் அன்வர் ரஸீத் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘அந்தகாரம்’ படம் கடந்த ஆண்டு (2020) நவம்பர் 24-ஆம் தேதி OTT-யில் ரிலீஸானது. அட்லி வெளியிட்ட இந்த படத்தை இயக்குநர் விக்னராஜன் இயக்கி உள்ளாராம்.

இதில் அர்ஜுன் தாஸுடன் சேர்ந்து வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன், மிஷா கோஷல் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ‘மாஸ்டர்’ படம் வருகிற பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 13-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், அர்ஜுன் தாஸ் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய தமிழ் படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர் வசந்த பாலன் இயக்க உள்ளாராம். இப்படம் 2019-யில் ரிலீஸான ‘தி லிஃப்ட் பாய்’ என்ற படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது.

Share.