எவர்கிரீன் கதாபாத்திரத்தை தவறவிட்ட அசின் !

சில்லுனு ஒரு காதல் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படமாகும். என். கிருஷ்ணா எழுதி இயக்கி இருந்தார் . இதில் ஜோதிகா, சூர்யா மற்றும் பூமிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர், ஷ்ரியா ஷர்மா, சுகன்யா, வடிவேலு மற்றும் சந்தானம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர் . கவிஞர் வாலியின் பாடல் வரிகளுடன் ஏ. ஆர். ரஹ்மானால் இசையமைக்கப்பட்டு இருந்தது . படத்திற்கான ஒளிப்பதிவை ஆர்.டி.ராஜசேகர் மற்றும் படத்தொகுப்பை ஆண்டனி கையாண்டு இருந்தனர் .

இந்தப் படம் சூர்யா மற்றும் ஜோதிகா திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு 8 செப்டம்பர் 2006 அன்று வெளியானது. பூமிகா சாவ்லா 5 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் இந்தப் படத்தில் நடித்தார். இப்படத்திற்கு முதலில் ஜில்லுனு ஒரு காதல் என்று பெயரிடப்பட்டது, பின்னர் அது சில்லுனு ஒரு காதல் என மாற்றப்பட்டு தூய-தமிழ்ப் பெயரைக் கொண்டது.

இந்நிலையில் பூமிகா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகை அசின் அவர்களை நடிக்க வைக்க இயக்குனர் கிருஷ்ணா முயன்றார் . ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் நடிகை அசினால் நடிக்க முடியாமல் போனது . அதன் பிறகு அந்த பாத்திரத்தில் நடிகை பூமிகா நடித்து அசத்தியிருந்தார் .

Share.