“வெளியே போய் புலம்புங்க, இங்க வந்து கத்தாதீங்க”… மகேஸ்வரி – அஸீம் இடையே மோதல்!
November 1, 2022 / 06:50 PM IST
|Follow Us
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 3-ஆம் தேதி முதல் இந்த ஆண்டு (2022) ஜனவரி 16-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இந்த சீசனில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னர் என்றும், பிரியங்கா ரன்னர் அப் என்றும் அறிவிக்கப்பட்டது.
‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 6 கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டா ராஜேஷ், ரச்சிதா மகாலக்ஷ்மி, ராம் ராமசாமி, ADK, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி, கதிரவன், குயின்ஸி, நிவா, தனலக்ஷ்மி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் மைனா நந்தினி என்ட்ரியானார். கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி ஜி.பி.முத்து சில காரணங்களால் வெளியேறி விட்டார். கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார்.
கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி அசல் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் மகேஸ்வரி – அஸீம் இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.