OTT-யில் ரிலீஸாகியிருக்கும் ‘கசட தபற’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஒரு ஹீரோ – ஹீரோயின் – வில்லன், அதற்கென ஒரு கதைக்களம் என தொடர்ந்து படங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதேபோல், இரண்டு அல்லது மூன்று ஹீரோக்களை வைத்து ஒவ்வொருவருக்கும் தனிக் கதைகளை ஒரே படத்தில் சொல்லி, கடைசியில் அக்கதைகளை இணைப்பது போன்றும் படங்கள் உண்டு. அதை ஹைப்பர் லிங்க் படம் என்று சொல்வார்கள்.

தற்போது, தமிழில் உருவாகியுள்ள புதிய ஹைப்பர் லிங்க் படம் தான் ‘கசட தபற’. இந்த படம் இன்று (ஆகஸ்ட் 27-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘சோனி லைவ்’-வில் ரிலீஸாகியுள்ளது.இப்படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சிம்பு தேவன் இயக்கி உள்ளாராம். இதில் ஹரிஷ் கல்யாண், சந்தீப் கிஷன், ஷாந்தனு, வெங்கட் பிரபு நடித்துள்ளனர்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் பிரேம்ஜி, ரெஜினா, ப்ரியா பவானி ஷங்கர், விஜயலக்ஷ்மி, அரவிந்த ஆகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்போது, இந்த படத்தை ‘சோனி லைவ்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Share.