பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய வேல்ஸ் பல்கலைக்கழகம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘ஜென்டில் மேன்’. ‘ஜென்டில் மேன்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் ஷங்கருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவருக்கு ‘காதலன், ஜீன்ஸ், இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, 2.0’ போன்ற படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஷங்கர் இயக்கத்தில் ரெடியாகி வந்த புதிய படமான ‘இந்தியன் 2’வில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடித்து வந்தார். இப்படத்தின் புது ஷெடியூல் ஷூட்டிங் இம்மாதம் (செப்டம்பர்) ஆரம்பமாகவிருக்கிறது.

‘இந்தியன் 2’ மட்டுமில்லாமல் இயக்குநர் ஷங்கர் தெலுங்கு மொழியில் ஒரு படமும், ஹிந்தி மொழியில் ஒரு படமும் இயக்க சமீபத்தில் ஒப்பந்தமானார். இதில் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் படத்தில் ஹீரோவாக டோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் நடிக்கிறார்.

ஹிந்தி மொழியில் உருவாக உள்ள படத்தில் ஹீரோவாக பாலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ரன்வீர் சிங் நடிக்க உள்ளாராம். இந்நிலையில், வேல்ஸ் பல்கலைக்கழகம் இயக்குநர் ஷங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

Share.