மலையாள திரையுலகில் லவ் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் அந்த நடிகை. அதன் பிறகு மலையாளம், தெலுங்கு என தொடர்ந்து அந்த நடிகையின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இவர் தமிழில் குழந்தை சென்டிமென்ட்டை வைத்து வெளியான ஹாரர் படத்தில் அறிமுகமானார்.
அதன் பிறகு டாப் ஸ்டாரின் மருமகன் ஹீரோவாக நடித்த படத்தில் அவருக்கு ஜோடியாக டூயட் பாடி ஆடினார். அவர் டூயட் பாடி ஆடிய அந்த ரௌடி பாடல் உலக அளவில் ஃபேமஸ் ஆனது. அதன் பிறகு ஜீனியஸ் இயக்குநரின் படத்தில் நடித்தார். இப்போது தெலுங்கில் மட்டுமே மூன்று படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் அந்த நடிகை.
ஆரம்பத்தில் இயக்குநர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை மட்டும் கேட்டு சமத்தாக நடித்து வந்தார் அந்த நடிகை. சமீப காலமாக இந்த நடிகை இயக்குநர்களிடம் தனது காட்சிகள் குறித்து பல கரெக்ஷன்ஸ் சொல்லி வருகிறாராம். இதனால் இவரை வைத்து படம் எடுக்கும் டோலிவுட் இயக்குநர்கள் செம கடுப்பில் உள்ளனராம்.