ஷங்கர் படம் பேசிய நடிகர் !

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அறியப்படுபவர் இயக்குனர் ஷங்கர் . 1993-ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் . இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் கதாநாயகனாக நடித்து இருந்தார் . காதலன் , இந்தியன் , ஜீன்ஸ் , முதல்வன் என் அடுத்து அடுத்து பல வெற்றிப் படங்களை கொடுத்து இருந்தார் . கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான படம் 2.o . இந்த படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி இருந்தது .இதனை தொடர்ந்து இந்தியன் 02 படத்தை இயக்கி வந்தார் . இந்த நிலையில் இந்தியன் 02 படப்பிடிப்பு பல காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து நடிகர் ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் . இந்த படத்தை பற்றி ராம் சரண் தற்பொழுது பேசி உள்ளார் .ஷங்கர் சார் எல்லாவற்றையும் மிகக் கச்சிதமாக திட்டமிட்டுள்ளார். 60 நாட்களை மிகச் சிறப்பாக படப்பிடிப்பை முடித்துள்ளார் . நான் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடித்து உள்ளேன் . பல வித்தியாசமான கெட்டப்பில் நடித்து இருக்கிறேன் என்றும் ராம் சரண் நடித்துள்ளார்.

சமீபத்தில் ராம் சரண் நடிப்பில் வெளியான படம் ரத்தம் ரணம் ரௌத்திரம் . இந்த படம் இந்திய முழுக்க மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது . இந்த நிலையில் ராம் சரண் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து உள்ளது .

Share.