2003 ஆம் ஆண்டு “ஹவா” என்ற இந்தி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் 2007 ஆம் ஆண்டு “தேசமுதுரு” என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினாக உருவெடுத்தார். பின் 2011ம் ஆண்டு வெளியான “மாப்பிள்ளை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.
இந்தப் படத்தை தொடர்ந்து எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, வேலாயுதம், சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம்-2, பிரியாணி, அரண்மனை, ரோமியோ ஜூலியட், வாலு, மனிதன், போகன் போன்ற வெற்றிப்படங்களில் தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் ஹன்சிகா மோத்வானி.
Wishing a very happy birthday to my heroine and princess #hansikamotwani @ihansika and here is the surpriseposter from team #MAHA #STR @MathiyalaganV9 @EtceteraEntert1 @malikstreams @GhibranOfficial @SanchetiReshma @laxmanmfi @DoneChannel1 @AbrahamEditor @ManimozhianRam2 pic.twitter.com/2HV4JC9nwg
— U.R.Jameel (@dir_URJameel) August 8, 2020
இவர் தற்போது யூ.ஆர்.ஜமீல் இயக்கத்தில் “மஹா” என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் பிறந்தநாளை முன்னிட்டு “மஹா” திரைப்படக்குழுவினர் இந்த படத்தின் ப்ரோமோ போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இந்த படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோ போஸ்டர் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி இந்த படத்தின் இயக்குனர் படப்பிடிப்பு தளத்தில் தன்னுடன் ஹன்சிகா மோத்வானி பேசிக் கொண்டிருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு மீண்டும் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Once again wishing you a very happy birthday @ihansika #Maha #HBDHansikaMotwani missing our #Maha shooting days pic.twitter.com/nqZA8EKx60
— U.R.Jameel (@dir_URJameel) August 9, 2020
இது மட்டுமின்றி ஹன்சிகா மோத்வானியின் 29 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர் ஒரு புதுமையான பர்த்டே சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்கள். இவர்கள் ஹன்சிகா மோத்வானியின் பெயரை ஒரு நட்சத்திரத்தின் பெயராக பதிவுசெய்து அதை அவரது பிறந்தநாளன்று சர்ப்ரைஸாக கொடுத்துள்ளார்கள்.
https://www.instagram.com/p/CDqG_F5HQzA/?igshid=1xsqgfpabdtnv
இந்த பரிசை கண்டதும் ஹன்சிகா மோத்வானி மகிழ்ச்சி வெள்ளத்தில் அந்த புகைப்படத்தை வெளியிட்டு ” உங்களுக்கு எனக்கு நட்சத்திரங்கள் எவ்வளவு பிடிக்கும் என்று தெரியும். உங்களைப்போல நண்பர்களும் குடும்பமும் கிடைத்த நான் பாக்கியசாலி. என் பெயரை நட்சத்திரத்திற்கு வைத்ததை விட சிறந்த பிறந்தநாள் பரிசு எனக்கு எதுவுமே கிடையாது. உங்கள் அன்புக்கு எனது நன்றி” என்று மகிழ்ச்சி வெள்ளத்தில் பதிவிட்டுள்ளார்.
Attachments area