கண்டெஸ்டென்ட் யார் யார் தெரியுமா ?

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில்  பிக்பாஸ் 6-வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது . மேலும் பிக் பாஸ் 6-வது  சீசனுக்கான போட்டியாளர்கள் குறித்தும் தகவல் வெளியாகி இருக்கிறது .

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளரான ரக்சன் ,சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமடைந்த  பாடகி ராஜலட்சமி ,  விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் திவ்யதர்ஷினி  ஆகியோர் இந்த ஆண்டு பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது .

இவர்களை தொடர்ந்து  இசையமைப்பாளர் டி. இமான்  அவர்களின்  முன்னாள் மனைவி மற்றும் பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஆகியோர்  பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . மேலும் இந்த சீசன் நிகழ்ச்சியை கமல் மற்றும் சிம்பு இருவரும்  இணைந்து தொகுத்து வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது .

Share.