கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “ஜோஸ்வா இமைபோல் காக்க”. இந்த திரைப்படத்தில் “நான் உன் ஜோஷ்வா” என்ற பாடல் விரைவில் வெளியிடப்படும் என்று கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்திருந்தார்.
இன்று காலை இந்த பாடலை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அந்தப்பாடல் வீடியோவின் முடிவில் ஒரு சர்ப்ரைஸையும் ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.
இந்த பாடலின் முடிவில் நடிகர் கிருஷ்ணா வந்திருப்பதாகவும், அதனால் “ஜோஷ்வா இமைபோல் காக்க” படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் கிருஷ்ணா தான் நடித்திருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன்.
இந்த படம் ஒரு ரொமேன்டிக் திரில்லர் திரைப்படம். இந்தப் படத்தில் நடிகர் வருண் மற்றும் ராதே ஜோடியாக நடித்துள்ளார்கள். இந்த படத்திற்காக பாரீஸ் சென்று தனியாக பயிற்சி எடுத்து வந்திருக்கிறார் நடிகர் வருண்.
பிரபல பாடகர் கார்த்திக் இந்த படத்தில் இசையமைத்திருக்கிறார். இதற்கு முன்னர் இவர் 2016ம் ஆண்டு வெளிவந்த “தமிழ்ச் செல்வியும் தனியார் அஞ்சலும்” படத்தில் இசையமைத்திருந்தார். தற்போது வெளியாகியுள்ள இந்த பாடலுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
https://t.co/qszYuoCIux It’s also the time to introduce Krishna as the villain in the film Joshua.. Thank you @Actor_Krishna for agreeing to do this for me! In return, you are looking really good brother😊
இந்த படத்தின் பாடல் தற்போது வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் எப்போது வெளிவரும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.லாக்டவுன் முடிந்ததும் இந்த படத்தின் மீதமுள்ள படப்பிடிப்புகள் தொடங்கப்படும் என்று திரைப்படக் குழு தெரிவித்துள்ளது.