வில்லனாக கெளதம் மேனன்… ‘திரௌபதி’ இயக்குநரின் புதிய படமான ‘ருத்ர தாண்டவம்’ ட்ரெய்லர்!
August 24, 2021 / 07:11 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ரிச்சர்ட் ரிஷி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தை ‘திரௌபதி’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் மோகன்.ஜி இயக்கியுள்ளார். இதில் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக தர்ஷா குப்தா டூயட் பாடி ஆடியுள்ளார்.
மேலும், இந்த படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளாராம். இதனை ‘GM ஃபிலிம் கார்ப்பரேஷன்’ மற்றும் ‘7G ஃபிலிம்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 2-ஆம் தேதி இதன் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்தது.
சமீபத்தில், இந்த படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்தனர். தற்போது, இப்படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் மோகன்.ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.