தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் மலையாளத்தில் ‘நிழல், பாட்டு’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம், நயன்தாராவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இந்த படத்தை அவரின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், சமந்தாவும் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்து வருகிறார். ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமாருடன் சேர்ந்து விக்னேஷ் சிவன் தனது ‘ரௌடி பிக்சர்ஸ்’ மூலம் தயாரிக்கும் இந்த படத்தின் செகண்ட் ஷெடியூல் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்தது. இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 14-ஆம் தேதி) காதலர் தின ஸ்பெஷலாக இந்த படத்தின் ‘ரெண்டு காதல்’ என்ற பாடலை ரிலீஸ் செய்தனர். இப்பாடல் அனிருத் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்துள்ளது.
Valentine’s Day Song for all you lovely people around
https://t.co/xcv14dpyvT #RenduFailure
From #KaathuVaakulaRenduKaadhal #Anirudh25
ThankU @anirudhofficial for giving me another song straight from your heart
love u@VijaySethuOffl #Nayanthara @Samanthaprabhu2
— Vignesh Shivan (@VigneshShivN) February 14, 2021