இந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் அதிக அளவில் நடித்து வருகிறார்.
2004 ஆம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் திரையுலகில் கால் பதித்த காஜல் அகர்வால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால் பெரிய அளவில் முதலில் புகழ் பெறாவிட்டாலும், பிறகு நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாற்றான், ஜில்லா, விவேகம், மெர்சல் போன்ற படங்களில் முன்னணி தமிழ் நட்சத்திரங்களுடன் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் திரையுலகில் பிடித்தார்.
சமீபத்தில் தொழிலதிபரான கௌதம் கிருஷ்ணா திருமணம் செய்து கொள்வதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகை காஜல்அகர்வால்.
இதற்கு இவரது ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து பதிவிட்டு வந்தார்கள். இதைத்தொடர்ந்து தற்போது தன்னுடைய வருங்கால கணவருடன் புகைப்படங்களை வெளியிட்டு காஜல்அகர்வால் அனைவருக்கும் தசரா பண்டிகைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். விரைவில் திருமணம் நடக்கவுள்ள இந்த காதல் ஜோடி மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
View this post on Instagram
Happy Dussehra from us to you ! @kitchlug #kajgautkitched
A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on