இந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் அதிக அளவில் நடித்து வருகிறார்.
2004 ஆம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் திரையுலகில் கால் பதித்த காஜல் அகர்வால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால் பெரிய அளவில் முதலில் புகழ் பெறாவிட்டாலும், பிறகு நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாற்றான், ஜில்லா, விவேகம், மெர்சல் போன்ற படங்களில் முன்னணி தமிழ் நட்சத்திரங்களுடன் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் திரையுலகில் பிடித்தார்.
இவருக்கு தற்போது திருமணம் நடக்கவிருப்பதாகவும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் செய்தி பரவி வருகிறது. இவர் அதிகாரபூர்வமாக தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றும் இது வதந்தி என்றும் கூறியுள்ளார். இருப்பினும் இவரது நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும் அவரது பெயர் கௌதம் என்றும் மீடியாவிற்கு தெரிய வேண்டாம் என்று இதை அவர்கள் ரகசியமாக பாதுகாத்து வருவதாகவும் ஒரு செய்தி பரவுகிறது.
இருப்பினும் காஜல் அகர்வால் திருமணம் செய்ய உள்ளார் என்ற செய்தி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அவர் பெற்றோர் அவருக்கு வரன் தேடி வந்தது ஏற்கனவே வெளியான செய்தி. காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தற்போது இந்தி படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வால் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் “இந்தியன்2” திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.