இந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் அதிக அளவில் நடித்து வருகிறார்.
2004 ஆம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் திரையுலகில் கால் பதித்த காஜல் அகர்வால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால் பெரிய அளவில் முதலில் புகழ் பெறாவிட்டாலும், பிறகு நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாற்றான், ஜில்லா, விவேகம், மெர்சல் போன்ற படங்களில் முன்னணி தமிழ் நட்சத்திரங்களுடன் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் திரையுலகில் பிடித்தார்.
சமீபத்தில் கௌதம் கிச்லு என்பவருடன் இவருக்கு திருமணம் நடந்தேறியது. திருமணமான முதல் தன் திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை மிகவும் மகிழ்ச்சியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் புது மணப்பெண் காஜல் அகர்வால்.
தற்போது தன் கணவருடன் மாலத்தீவிற்கு ஹனிமூன் சென்றுள்ள காஜல் அகர்வால் தன் கணவருடன் டீப் சீ டைவிங் சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது!