தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் காஜல் அகர்வால் . இவர் 2008 -ஆம் ஆண்டு வெளியான பழனி என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் . இந்த படத்தை பேரரசு இயக்கி இருந்தார் . இதன் பிறகு சில படங்களில் இவர் நடித்து இருந்தாலும் காஜல் அகர்வாலை ரசிகர்களிடம் பிரபலமாக்கிய படம் மகதீரா . தெலுங்கு திரை உலகில் இந்த படம் பெரிய வெற்றியை அடைந்தது . இதனை தொடர்ந்து தமிழில் இவருக்கு மிக பெரிய வெற்றி அடைந்த படமாக நான் மகான் அல்ல படம் அமைந்தது .
அதன் பிறகு நடிகர் சூர்யாவுடன் மாற்றான் படத்திலும் நடிகர் விஜய்யுடன் துப்பாக்கி படத்திலும் நடித்து நட்சத்திர நடிகையாக மாறினார் . இந்நிலையில் லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடித்து வந்தார்.\
இந்தியன் 2 படப்பிடிப்பு நின்ற பிறகு காஜல் அகர்வாலுக்கு திருமணம் நடந்து குழந்தை பிறந்து உள்ளது . இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பில் காஜல் அகர்வால் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்து இருந்தது . ஆனால் மீண்டும் தொடங்கி உள்ள இந்தியன் 2 படப்பிடிப்பில் காஜல் நடித்து வருகிறார் .
இது ஒரு பக்கம் காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்வார் . அந்த வகையில் தற்போது தனது குழந்தையை கொஞ்சுவது , குழந்தையுடன் விளையாடுவது போன்ற படங்களை பகிர்ந்து உள்ளார் . தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.