• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஷங்கரின் ‘இந்தியன் 2’ பிரச்சனை… கமல் ஹாசன் எடுத்த அதிரடி முடிவு!

ஷங்கரின் ‘இந்தியன் 2’ பிரச்சனை… கமல் ஹாசன் எடுத்த அதிரடி முடிவு!

  • May 10, 2021 / 07:04 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஷங்கரின் ‘இந்தியன் 2’ பிரச்சனை… கமல் ஹாசன் எடுத்த அதிரடி முடிவு!

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். ரஜினியின் ‘2.0’ படத்துக்கு பிறகு இவர் இயக்கத்தில் ரெடியாகி வந்த படம் ‘இந்தியன் 2’. இப்படத்தின் புது ஷெடியூல் ஷூட்டிங்கை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஒரு கட்டத்தில் கடுப்பான இயக்குநர் ஷங்கர் வேறு ஒரு புதிய படத்தை இயக்க சமீபத்தில் ஒப்பந்தமானார்.

இந்த படத்தில் ஹீரோவாக டோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் நடிக்க உள்ளாராம். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனால் டென்ஷனான ‘இந்தியன் 2’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘லைகா’ சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது.

இது தொடர்பாக ‘லைகா’ நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் “ரூ.236 கோடிக்கு பட்ஜெட் போடப்பட்டு, அதில் ரூ.180 கோடி ஏற்கனவே செலவு செய்தும் இப்படத்தின் 80% பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. இயக்குநர் ஷங்கருக்கு ரூ.40 கோடி சம்பளம் பேசப்பட்டு, ஏற்கனவே ரூ.14 கோடி கொடுத்து விட்டோம். அவருக்கு கொடுக்க வேண்டிய பேலன்ஸ் சம்பளத்தையும் கொடுத்து விடுகிறோம், பேலன்ஸ் 20% படத்தை முடித்துக் கொடுக்க சொல்லுங்கள். அதுவரை மற்ற படங்களை இயக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி இவ்வழக்கை விசாரித்த நீதிபதி “இயக்குநர் ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல், அவர் மற்ற படங்களை இயக்குவதற்கு தடை விதிக்க முடியாது. இது தொடர்பாக இயக்குநர் ஷங்கர் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டிருந்தார். பின், கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி இவ்வழக்கை விசாரித்த நீதிபதி “இந்த படம் தொடர்பான பிரச்சனை குறித்து இயக்குநர் ஷங்கரும், ‘லைகா’ நிறுவனத்தினரும் இணைந்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும்” என்று கூறியிருந்தார்.

கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி நீதிமன்றத்தில் இயக்குநர் ஷங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “இயக்குநர் ஷங்கரும், ‘லைகா’ நிறுவனத்தினரும் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி நேரில் சந்தித்து பேசினார்கள். வருகிற ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதத்திற்குள் நான் இந்த படத்தை முடித்து கொடுக்கிறேன் என்று ஷங்கர் கூறினார். ஆனால், ‘லைகா’ நிறுவனமோ ஜூன் மாதத்திற்குள் படத்தை முடித்து கொடுக்க வேண்டும் என்று சொன்னதால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது” என்று கூறியிருந்தார். இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். தற்போது, நடிகர் கமல் ஹாசன் இப்பிரச்சனை தொடர்பாக ஷங்கர் மற்றும் ‘லைகா’ நிறுவனத்தினரை நேரில் சந்தித்து ஷூட்டிங்கை மீண்டும் ஆரம்பிக்க பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Kamal Haasan
  • #Hero Kamal Haasan
  • #Indian 2 Movie

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Thug Life : யூடியூபில் ‘தக் லைஃப்’ அறிவிப்பு வீடியோ செய்த சாதனை… கொண்டாட்டத்தில் கமல் ரசிகர்கள்!

Thug Life : யூடியூபில் ‘தக் லைஃப்’ அறிவிப்பு வீடியோ செய்த சாதனை… கொண்டாட்டத்தில் கமல் ரசிகர்கள்!

இந்தியன் 2 படத்தில் நடிக்க தயாராகும் காஜல் !

இந்தியன் 2 படத்தில் நடிக்க தயாராகும் காஜல் !

கோலிவுட் சினிமாவில் பிரபலமான வாத்தியார் கதாபாத்திரங்கள் !

கோலிவுட் சினிமாவில் பிரபலமான வாத்தியார் கதாபாத்திரங்கள் !

மீண்டும் ட்விஸ்ட் வைக்கும் கமல் !

மீண்டும் ட்விஸ்ட் வைக்கும் கமல் !

21 வயதிலிருந்தே இதை செய்ய தொடங்கினேன் !

21 வயதிலிருந்தே இதை செய்ய தொடங்கினேன் !

காசு தேவை இல்லை ! நட்பு தான் முக்கியம் என்ற முடிவை எடுத்த 4 நடிகர்கள் !

காசு தேவை இல்லை ! நட்பு தான் முக்கியம் என்ற முடிவை எடுத்த 4 நடிகர்கள் !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version