விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இப்போது, ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாகப்போகிறது. அதற்கான வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்ட ‘விக்ரம்’ டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனுக்கு எதிராக மோதும் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாப்புலர் ஹீரோவும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸுக்கு ரூ.7 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். தற்போது, லாரன்ஸ் வில்லனாக கமிட்டான பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜை சந்தித்து பேசிய கமல், இந்த படத்தில் லாரன்ஸுக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்து அவருடைய படமாக மாற்றி விட வேண்டாம் என்று கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. லோகேஷ் இயக்கிய முந்தைய படமான மாஸ்டரில் ஹீரோ விஜய்யை விட வில்லன் விஜய் சேதுபதிக்கே அதிக ஸ்கோப் கொடுத்து அது மக்கள் செல்வனின் படமாக மாறியது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் கமல் இந்த மாதிரி ஒரு கண்டிஷனை போட்டுள்ளாராம்.