‘காந்தாரா’ படத்தை பார்த்துட்டு ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்… வைரலாகும் ஸ்டில்ஸ்!
October 29, 2022 / 12:10 PM IST
|Follow Us
கன்னட சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ரிஷப் ஷெட்டி. இவர் இயக்கி, நடித்திருக்கும் புதிய படமான ‘காந்தாரா’ கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் கன்னட மொழியில் ரிலீஸானது.
இதில் மிக முக்கிய ரோல்களில் சப்தமி கௌடா, கிஷோர், அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். பி.அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இதற்கு அர்விந்த்.எஸ்.காஷ்யப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால், இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது.
சமீபத்தில், இப்படத்தை பார்த்து ரசித்த கோலிவுட்டின் முன்னணி நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ட்விட்டரில் “காந்தாரா இந்திய சினிமாவின் மாஸ்டர்பீஸ்” என்று குறிப்பிட்டு, இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டியையும், படக்குழுவினரையும் பாராட்டி ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். இந்நிலையில், நேற்று ரஜினி ரிஷப் ஷெட்டியை நேரில் சந்தித்து பாராட்டியதாக தகவல் கிடைத்துள்ளது.
‘Master and his Apprentice’ engaged in an insightful conversation!
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.