ஷில்பா ஷெட்டி டு நயன்தாரா… வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட திரையுலக பிரபலங்களின் லிஸ்ட்!
October 10, 2022 / 07:49 PM IST
|Follow Us
தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘கனெக்ட்’, மலையாளத்தில் ‘கோல்டு’, ஹிந்தியில் ‘ஜவான்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
சமீபத்தில், நயன்தாராவின் 75-வது படம் (தமிழ்) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ளாராம். இவர் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம்.
இந்த ஆண்டு (2022) ஜூன் 9-ஆம் தேதி நடிகை நயன்தாரா பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே, பிரபல OTT நிறுவனமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’ இவர்களின் திருமண நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையை ரூ.25 கோடிக்கு வாங்கியிருந்தது. சமீபத்தில், ‘நெட்ஃப்ளிக்ஸ்’ நிறுவனம் மிக விரைவில் இவர்களின் திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தேதி அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டு ஒரு டீசரையும் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று விக்னேஷ் சிவன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “வாடகைத் தாய் மூலம் நானும், நயன்தாராவும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ளோம்” என்று ஹேப்பியாக ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். இதுவரை வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட திரையுலக பிரபலங்களின் லிஸ்ட் இதோ…
1.பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி – ராஜ் குந்த்ரா
2.பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா – ஜெனி குட்எனப்
3.பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர்
4.பாலிவுட் நடிகர் துஷார் கபூர்
5.பாலிவுட் நடிகர் ஷாருக்கான் – கௌரி கான்
6.பாலிவுட் நடிகர் அமீர் கான் – கிரண் ராவ்
7.பாலிவுட் நடிகை சன்னி லியோன் – டேனியல் வெபர்
8.பாலிவுட் இயக்குநர் கரன் ஜோஹர்
9.தெலுங்கு நடிகை லக்ஷ்மி மஞ்சு – அன்டி ஸ்ரீநிவாசன்